தேவையான பொருட்கள்
- பீட்ரூட் – 1
- வரமிளகாய் – 4
- உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி
- கடலைபருப்பு – 2 தேக்கரண்டி
- புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
- தேங்காய் – 2 தேக்கரண்டி(விருப்பதிற்கேற்ப)
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – 2 தேக்கரண்டி
பீட்ரூட் தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு, வரமிளகாய், பீட்ரூட், புளி ஆகியவற்றை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு தேங்காய் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்.
வதக்கியவற்றுடன் உப்பு சேர்த்து அரைக்கவும்.
குறிப்புஇந்த சட்னி சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.