சிக்கன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மேத்தி தூள்(எவரெஸ்ட் சுகரி மேத்தி) – 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 4 தேக்கரண்டி
கரம் மசாலா – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் – 1 /2 மூடி
கொத்தமல்லி தழை – சிறிது
கடுகு – 1 /2 தேக்கரண்டி
செய்முறை
- மஞ்சள் தூளை சிக்கனில் போட்டு கலந்து வைக்கவும்.
- தேங்காயை அரைத்து பால் எடுத்து வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு வதக்கவும்.
- பின் மேலே கொடுத்துள்ள தூள்கள் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
- சிக்கன் , உப்பு சேர்த்து வதக்கி , தேவையான அளவு நீர் ஊற்றி வேக விடவும்.
- முக்கால் பாகம் வெந்தவுடன் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.
- இறக்குவதற்கு முன்பாக மேத்தியை பொடி செய்து போட்டு 2 நிமிடங்கள் விட்டு இறக்கவும்.
குறிப்பு
மேத்தி சிக்கன் சப்பாத்திக்கு நன்றாக இருக்கும்