Monday, February 19, 2018

கருவேப்பிலைக் குழம்பு | Curry Leaves kulambu | IYENGAR SAMYAL



தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை – 1/2 கப்

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

தணியா – 5 ஸ்பூன்

மிளகாய்- 8

மிளகு – 1 ஸ்பூன்

சுக்கு – சிறு துண்டு

வெந்தயம் – 1 ஸ்பூன்

கொப்பரை – 3 ஸ்பூன் விரும்பினால்

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவைக்கேற்ப

பெருங்காயம்-சிறிது

மஞ்சள் தூள்

தாளிக்க

நல்லெண்ணை ,கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை

தயார் செய்யும் முறை:

  • புளியை ஊற விடவும்.
  • வாணலியில் துவரம் பருப்பு,கடலைப் பருப்பு,தணியா,மிளகாய்,மிளகு,சுக்கு,வெந்தயம்,பெருங்காயம்,கொப்பரை,கருவேப்பிலை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். 
  • வாணலியில் நல்லெண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து,புளியை கரைத்துஊற்றி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • கொதித்தவுடன் அரைத்த மசாலாவை போட்டு,உப்பு சேர்க்கவும். எண்ணை கசிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
  • கருவேப்பிலை தூவி பறிமாறவும்.கருவேப்பிலைக் குழம்பு செறிமானத்தை தூண்டும்.பித்தம் சரி செய்யும்.

எத்தனை நபர்களுக்கு:
1-5 நபர்கள் வரை
தயாரிக்க ஆகும் கால அளவு:
15 முதல் 30 நிமிடங்கள்

SHARE THIS

Author: