தேவையான பொருட்கள்
- வேக வைத்து குளிர வைத்த சாதம் – 4 கப்
- பூண்டு பொடியாக நறுக்கியது – 1 பல்
- வெங்காயத்தாள் பொடியாக நறுக்கியது – 2
- பொடியாக நறுக்கிய குடமிளகாய் – கையளவு
- பொடியாக நறுக்கிய காய்கறிகள் – கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பட்டாணி – 1 கப்
- மிளகுத்தூள் – தேவையான அளவு
- வினிகர் – 3/4 மேசைக்கரண்டி
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் / ஆலிவ் எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சாதத்தை வேக வைத்து நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.
காய்கறிகளை 2 நிமிடங்கள் மட்டும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின் வெங்காயத்தாளில் வெள்ளைப் பகுதியை மட்டும் சேர்த்து அதிக தீயில் 1 நிமிடம் வரை வதக்கவும்.