Friday, January 26, 2018

தொப்பை குறைய உடற்பயிற்சி | Belly fat exercise



இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது தொப்பை. இதற்கு முக்கிய காரணம் உடல் உழைப்பு இல்லாதது மற்றும் நொறுக்கு தீனி சாப்பிடுவது, அசைவ உணவை தினமும் எடுத்துக் கொள்வது போன்ற பல பிரச்சனைகள் ….

தொப்பையை குறைக்க ஜீம்முக்கு சென்று தான் குறைக்க வேண்டும் அவசியம் இல்லை. வீட்டிலேயே சில எளிய பயிற்சிகள் மூலம் தொப்பையை குறைக்க முடியும். தொப்பை குறைய எளிய பயிற்சி இதோ… முதலில் விரிப்பில் மல்லாந்து படுத்து கொள்ளவும்.

படத்தில் காட்டியபடி தலையின் இரு பக்கமும் விரல்களால் தொட்டபடியே தலையை மேலே கொண்டுவந்து நன்றாக முதுகை வளைக்க வேண்டும். பின்னர் மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இந்தப் பயிற்சியினால் மேல் பகுதிக்கு நல்ல அழுத்தம் கிடைக்கிறது.

இவ்வாறு ஆரம்பத்தில் 10 முறை செய்யலாம். நன்கு பயிற்சி பெற்ற பின்னர் 25 முறை செய்யலாம் (அல்லது உங்களால் முடிந்த அளவு எவ்வளவு முறை வேண்டுமானாலும் செய்யலாம்.).

இவ்வாறு தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக பார்க்கலாம். இதனால் வயிற்றின் மேல் பகுதியில் உள்ள தசை இறுகி, தொப்பை குறையும். முதுகு வலி உள்ளவர்களுக்கு இந்த பயிற்சி ஏற்றது.

• விரிப்பில் நேராக படுத்து மெதுவா உங்க காலை மேல தூக்குங்க. முதுகு தரையில் இருக்க வேண்டும். காலை மடக்காமல் நேராக இருக்க வேண்டும்.

• இரண்டு காலையும் மடக்கி தரையில் படுங்க. பின் வலது காலை மட்டும் நேராக நீட்டி 10 வினாடி இருக்கவும். பின் வலது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். பின் இடது காலை நேராக நீட்டி 10 வினாடி இருக்கவும் பின் இடது காலை பழைய நிலைக்கு கொண்டுவரவும். 10 முறை இவ்வாறு செய்யவும். நன்கு பழகிய பின்னர் தினமும் 25 முறை செய்யலாம்.

• தரையில் நேராக படுத்த பின்னர் இரண்டு காலையும் தரையில் இருந்து முட்டி மடங்காம நேரா தூக்க வேண்டும். இதே நிலையில் 30 வினாடிகள் இருங்க வேண்டும். நேரம் ஆக ஆக வயிறு இறுகும் உங்களால் காலை தூக்குனாப்பல வைச்சிருக்க முடியாது. 10, 15, …., 60 வினாடின்னு நேரத்தை அதிகரிச்சுக்கலாம். நேரத்தை அதிகரிக்க முயற்சி பண்ணுங்க. 10 முறை இப்படி பண்ணுங்க.

SHARE THIS

Author: