நெத்திலி மீன் – 300 கிராம்
எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
அரைப்பதற்கு…
சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது)
தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது)
பூண்டு – 10 பற்கள்
மிளகு – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
செய்முறை:
- முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.
- பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.
- பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.
- அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
- மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி!!!