தேவையான பொருட்கள்
- அரிசி – 1 கப்
- தயிர் – 2 கப்
- பால் – 1 /4 கப்
- வரமிளகாய் – 2 (அல்லது)
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – 1 / 4 தேக்கரண்டி(பொடியாக நறுக்கியது)
- கடுகு – 1 தேக்கரண்டி
- உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
- கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
- பெருங்காயம் – 1 /4 தேக்கரண்டி
- கருவேப்பிலை – 1 கொத்து
அரிசியை உப்பு சேர்த்து வேக வைத்து குழைய வடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு போட்டு வதக்கவும்.
லேசாக சிவந்ததும் இஞ்சி, வரமிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி தழை, பெருங்காயம் சேர்த்து வதக்கி அதை தயிரில் கொட்டவும்.
வேண்டுமெனில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
தாளித்து கொட்டிய தயிர் மற்றும் பாலை சாதத்தில் கலந்து பரிமாறவும்.