Monday, February 19, 2018

சன்னா பிரியாணி | IYENGAR IN TAMIL RECIPES


தேவையான பொருட்கள்:

சன்னா வெள்ளை – 150 கிராம்

வெங்காயம் பெரியது – 1

தக்காளி – 2

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய்த்துள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1 ஸ்பூன்

தயிர் – 1 குழிக்கரண்டி

புதினா இலை – சிறிது

பாசுமதி அரிசி கழுவி வடித்தது உதிரியாக – 200 கிராம்

தாளிக்க

பட்டை,லவங்கம்,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி,நெய் – 1ஸ்பூன் ,எண்ணைய் -தேவைக்கு

அலங்கரிக்க
வட்டமாக அரிந்த வெங்காயம்,தக்காளி,எலுமிச்சம் பழம்,கொத்தமல்லி,புதினா

விரும்பினால் காய்கறிகள் காரட் ,உருளை சேர்க்கலாம்.

தயார் செய்யும் முறை:

  • வெள்ளை சன்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டுவேகவைக்கவும்.
  • பின்னர் பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து உதிரி உதிரியாக சாதம் வடிக்கவும்.ஆற விடவும்.
  • பின் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். 
  • வாணலியில் எண்ணை,நெய் கலந்து சூடு செய்து லவங்கம்,பட்டை,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தயிர் சேர்க்கவும்.புதினா,வேகவைத்த சன்னா சேர்த்து கிளறி,இறுதியில் சாதம் சேர்த்து கிளறவும். 
  • கொத்தமல்லி,புதினா வட்ட வெங்காயம்,தக்காளி கொண்டுஅலங்கரிக்கவும்.பிரியாணி ரெடி.

SHARE THIS

Author: