Tuesday, February 20, 2018

காரக்குழம்பு | KARA KULAMBU


வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு

செய்முறை.
  • புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்கொள்ளவும்.
  • புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.திட்டமாக உப்பு சேர்க்கவும்.
  • ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
  • குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி,தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டி, புளிக் கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். 
  • பாதியளவாகச் சுண்டி வரும்போது இறக்கிவைத்து கறிவேப்பிலையால் அலங்கரிக்கவும். வாஸனையாகவும் இருக்கும், அழகாகவும் இருக்கும். எல்லாவற்றுடனும் சேர்த்து விருப்பம் போலச் சாப்பிடலாம். 
  • இருக்கும் ஸாமான்களை வைத்தே காரக் குழம்பாம். மிக்க நன்றாக இருக்கிறதென்று செலவாயிற்று. 
  • நீங்களும் செய்யலாமே. காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய் அதிகப்படுத்தவும்.

SHARE THIS

Author: