Showing posts with label மூலிகை மருத்துவம். Show all posts
Showing posts with label மூலிகை மருத்துவம். Show all posts

Tuesday, January 23, 2018

முடி வளர பாட்டி வைத்தியம் | LONG HAIR TAMIL

முடி வளர பாட்டி வைத்தியம் | LONG HAIR TAMIL



வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

Saturday, January 20, 2018

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு,VAITHU PUN KUNAMAGA AGATHI KEERAI KULAMBU

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு,VAITHU PUN KUNAMAGA AGATHI KEERAI KULAMBU


அகத்திக்கீரை வாய்ப்புண், வயிற்றுப்புண் ஆற அருமருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கீரையை வைத்து குழம்பு செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம்.

வயிற்றுப்புண்ணை குணமாக்கும் அகத்திக்கீரைக் குழம்பு
தேவையான பொருட்கள் :

அகத்திக்கீரை – ஒரு கப்
தேங்காய்த் துருவல் – தேவைக்கு
பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
காய்ந்த மிளகாய் – ஒன்று
தக்காளி – ஒன்று
அரிசி களைந்த நீர் – ஒரு கப்
சம்பார் பொடி – தேவைக்கேற்ப
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

* அகத்திக்கீரையை நீரில் அலசி நீரை, வடியவிட்டு கீரையை உருவி மீடியம் சைஸில் நறுக்கி வைக்கவும்.

* வெங்காயத்தை வட்டமாகவும், தக்காளியைப் பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

* பாசிப்பருப்பை வேகவைத்து கொள்ளவும்.

* தேங்காய்த் துருவலில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து பால் எடுக்கவும்.

* அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்த பின் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து, வதங்கும்போது கீரையையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

* இத்துடன் சாம்பார் பொடி, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும்.

* அடுத்து அதில் அரிசி களைந்த நீர் சேர்த்துக் கீரையை வேகவிடவும்.

* கீரை வெந்ததும், வேகவைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் தேங்காய்ப்பால் விட்டு கிளறி இறக்கவும்.

* அகத்திக்கீரைக் குழம்பு ரெடி.