சிக்கன் – 1 /2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 /2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 /2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
அரைக்க
சின்ன வெங்காயம் – 10 (அல்லது)
பெரிய வெங்காயம் – 1
இஞ்சி – 1 “
பூண்டு – 7
வர கொத்தமல்லி – 3 தேக்கரண்டி
சீரகம் – 1 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
வெந்தயம் – 1 /2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 1 கொத்து
பட்டை – 2 “
கிராம்பு – 2
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
தேங்காய் – 4 தேக்கரண்டி
தாளிக்க
கடுகு – 1 /2 தேக்கரண்டி
தக்காளி – 1 /2
செய்முறை
- சிக்கனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.சிக்கனில் சிறிது மஞ்சள் தூள் கலந்து நன்றாக கழுவிக் கொள்ளவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் தனித்தனியாக லேசாக வறுத்துக் கொள்ளவும்.
- வெங்காயம்,இஞ்சி,பூண்டு முதலியவற்றை சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கிக் கொள்ளவும்.
- வதக்கிய பொருட்கள் அனைத்தையும் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,கருவேப்பிலை தாளித்து சிக்கனை போட்டு வதக்கவும்.
- சிக்கனில் இருந்து வந்த தண்ணீர் வற்றியவுடன் தக்காளி போட்டு வதக்கவும்.
- பின் அரைத்த மசாலா, உப்பு போட்டு வதக்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக விடவும்.
- தேங்காயை அரைத்துக் கொள்ளவும்.
- சிக்கன் வெந்தவுடன் அரைத்த தேங்காய் ஊற்றி 2 நிமிடங்கள் வேக விட்டு இறக்கி வைக்கவும்.