தேவையான பொருட்கள்:
- பச்சரிசி – 1 கப்
- இட்லி அரிசி – 1 கப்
- பாசிபருப்பு – 1 /4 கப்
- துவரம்பருப்பு – 1 /4 கப்
- கடலைபருப்பு – 1 / 4 கப்
- உளுத்தம்பருப்பு – 1 /4 கப்
- வெந்தயம் – 1 டீஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- வரமிளகாய் – 8
- சின்னவெங்காயம் – 200 கிராம்
- பூண்டு – 8 பல்
- பெருங்காயம் – சிறிதளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
வெந்தயம், பருப்புகளை ஒன்றாக சேர்த்து 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
மேல் கூறிய பொருட்களை பருப்புடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
அரைத்த மாவை 8 மணி நேரம் புளிக்க வைத்தபின் தோசை ஊற்றவும்.