- கடுகு – 1 ஸ்பூன்
- சீரகம் – 1 / 2 ஸ்பூன்
- சோம்பு – 1 / 2 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 1
- தக்காளி – 1
- இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- முட்டை கோஸ் அல்லது எதாவது ஒரு காய்கறி
- சப்பாத்தி – 4
- கொத்தமல்லி தழை – சிறிது
- குடை மிளகாய் – 1
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- எண்ணெய் – தேவையான அளவு
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், சோம்பு போட்டு அதனுடன் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமானதும் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளி, முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி, பூண்டு விழுது, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி சேர்த்து வதக்கவும். சப்பாத்தியுடன் பன்னீர் அல்லது நெய்யில் வறுத்த பிரட்டையும் சேர்த்துக்கொள்ளலாம்.