Tuesday, January 23, 2018

பெண்களுக்கான பாட்டி வைத்தியம் | Remedies for women


• மாதவிலக்கு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படாதவர்கள் வெங்காயத்தாள், காயவைத்த கறுப்பு எள், கருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்துக் கொள்ளவும். மாத விலக்கு தடைபடும் காலங்களில் காலை, மாலை இரு வேளையும் ஒரு ஸ்பூன் அளவுக்கு மூன்று நாட்கள் சாப்பிட்டால் மாதவிலக்கு ஏற்படும்.

• விளா மரத்தின் பிசினை மஞ்சள் சேர்த்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

• வாழைப்பூவை இடித்து சாறு எடுத்து அதில் பனங்கற்கண்டு சேர்த்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

• வல்லாரைக் கீரை சாற்றில் பெருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

• லவங்கப் பட்டையை பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் மாத விலக்கின் போது அதிக ரத்தப்போக்கு நிற்கும்.

• முள் இலவம்பட்டையை 200 கிராம் அளவுக்கு எடுத்து பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் ஐந்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் பிரச்சனை குணமாகும்.

• முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கருப்பை பலப்படும்.

SHARE THIS

Author: