Showing posts with label அசைவம். Show all posts
Showing posts with label அசைவம். Show all posts

Sunday, February 18, 2018

நெத்திலி மீன் தொக்கு | NETHILI MEEN SAMYAL

நெத்திலி மீன் தொக்கு | NETHILI MEEN SAMYAL


தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 300 கிராம் 
எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப் 
வெந்தயம் – 1 டீஸ்பூன் 
பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை – 1 கைப்பிடி 
அரைப்பதற்கு… 
சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது) 
தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது) 
பூண்டு – 10 பற்கள் 
மிளகு – 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் – 2 

செய்முறை
  • முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  •  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
  • பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். 
  • பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
  • அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
  • மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி!!!

Friday, February 9, 2018

ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

தேவையான பொருட்கள்
உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 1 /2 மூடி
புளி – 1 கோலி குண்டு அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து


செய்முறை
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
  • இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
  • நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Thursday, February 8, 2018

சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

தேவையான பொருட்கள்
கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
  • இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

Wednesday, February 7, 2018

சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை- 10 இலைகள்
மல்லித்தழை – 1/4 கட்டு
பிரியாணி இலை – 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்


அரைக்க

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி,1/2 தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும்.
  • மல்லித்தழை தூவி இட்லி, தோசை, இடியாப்பம், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

Tuesday, February 6, 2018

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க
தேங்காய் துருவியது – 1 /4 கப்
மிளகு – 10 – 15
சீரகம் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1 /4 கப்



செய்முறை

  • புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
  • பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  • வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.


குறிப்பு
மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.