Showing posts with label Non Vegetarian Recipes Tamil. Show all posts
Showing posts with label Non Vegetarian Recipes Tamil. Show all posts

Friday, February 9, 2018

ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

தேவையான பொருட்கள்
உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 1 /2 மூடி
புளி – 1 கோலி குண்டு அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து


செய்முறை
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
  • இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
  • நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Thursday, February 8, 2018

சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

தேவையான பொருட்கள்
கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
  • இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.

Wednesday, February 7, 2018

சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை- 10 இலைகள்
மல்லித்தழை – 1/4 கட்டு
பிரியாணி இலை – 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்


அரைக்க

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி,1/2 தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும்.
  • மல்லித்தழை தூவி இட்லி, தோசை, இடியாப்பம், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.

Tuesday, February 6, 2018

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க
தேங்காய் துருவியது – 1 /4 கப்
மிளகு – 10 – 15
சீரகம் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1 /4 கப்



செய்முறை

  • புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
  • பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  • வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.


குறிப்பு
மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.
மீன் குழம்பு |FISH CURRY RECIPE IN TAMIL

மீன் குழம்பு |FISH CURRY RECIPE IN TAMIL

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ

வதக்கி அரைக்க
சின்ன வெங்காயம் – 6
பெரிய தக்காளி – 1

தாளிக்க
கடுகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 5 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி – 1 (நீளமான துண்டுகளாக நறுக்கவும்)
தேங்காய்ப் பால் – 1 /2 – 3 /4 கப்
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மசாலாதூள் – 2 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

செய்முறை
  • மீனை சுத்தம் செய்து 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
  • புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,வெந்தயம், வரமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் புளி கரைசல், உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
  • குழம்பு கெட்டியானவுடன் தேங்காய் பால் ஊற்றி 3 – 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து வேக விடவும்.
  • மீன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.