மீன் – 1 /2 கிலோ
வதக்கி அரைக்க
சின்ன வெங்காயம் – 6
பெரிய தக்காளி – 1
தாளிக்க
கடுகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 /4 தேக்கரண்டி
வரமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 5 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
தக்காளி – 1 (நீளமான துண்டுகளாக நறுக்கவும்)
தேங்காய்ப் பால் – 1 /2 – 3 /4 கப்
மஞ்சள்தூள் – 1 /4 தேக்கரண்டி
மசாலாதூள் – 2 தேக்கரண்டி
புளி – சிறிய எலுமிச்சம்பழ அளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
செய்முறை
- மீனை சுத்தம் செய்து 1 இன்ச் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
- புளியை ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை,வெந்தயம், வரமிளகாய் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
- பின்னர் அரைத்த மசாலா, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் புளி கரைசல், உப்பு மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
- குழம்பு கெட்டியானவுடன் தேங்காய் பால் ஊற்றி 3 – 4 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை குழம்பில் சேர்த்து வேக விடவும்.
- மீன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.