தேவையான பொருட்கள்
- நெய் – 2 மேசைக்கரண்டி
- பாசுமதி அரிசி – 1 கப்
- பச்சை மிளகாய் – 3
- பூண்டு – 7 பல்
- இஞ்சி – 1 தேக்கரண்டி
- பட்டாணி – 100 கிராம்
- பட்டை – 2
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- பிரியாணி இலை – 1
- முந்திரிபருப்பு – 7
பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, முந்திரி போட்டு வதக்கவும்.
பின் அரைத்த மசாலாவை போட்டு வதக்கவும்.
பட்டாணியை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
அரிசியை கழுவி , குக்கரில் போட்டு மசாலா அனைத்தும் அரிசியோடு கலக்குமாறு வதக்கவும்.
1 கப் அரிசிக்கு 1 3 / 4 கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரை மூடி வேக விடவும்.
ஒரு விசில் வந்தவுடன் குக்கரை இறக்கி விடவும்.
குறிப்பு
நெய் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள உருளைகிழங்கு குருமா நன்றாக இருக்கும்.