Monday, February 5, 2018

மோர் குழம்பு | Mor Kulampu

தேவையான பொருட்கள்
தயிர் – 2 கப்
மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
காய் – பூசணிக்காய், மேரக்காய்,வெண்டைக்காய்(விருப்பத்திற்கேற்ப)

தாளிக்க
கடுகு – 1 / 2 தேக்கரண்டி
வெந்தயம் – 1 / 4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 2
பெருங்காயம் – 1 / 2 தேக்கரண்டி
எண்ணெய் – 3 தேக்கரண்டி

அரைக்க
பச்சைமிளகாய் – 5
தனியா – 1 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி
பச்சரிசி – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
மல்லிதழை – சிறிது
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி


செய்முறை
  • மல்லிதழை , தேங்காய்துருவல் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாகச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து ,
  • அரைக்கும்போது மல்லிதழை , தேங்காய்துருவல் சேர்த்து அரைக்கவும்.
  • தயிரை லேசாக அடித்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை தயிர், மஞ்சள்தூள், உப்புடன் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
  • காயை நறுக்கி தனியே வேக வைத்து இதனுடன் சேர்க்கவும்.
  • கடுகு, வெந்தயம், மிளகாய், பெருங்காயம் தாளித்து, கலந்து வைத்த கரைசலை இதில் ஊற்றவும்.
  • நுரை கட்டி வந்ததும் இறக்கி வைக்கவும்.

SHARE THIS

Author: