Showing posts with label சிற்றுண்டி. Show all posts
Showing posts with label சிற்றுண்டி. Show all posts

Monday, January 22, 2018

வெள்ளை பொங்கல் | paal pongal

வெள்ளை பொங்கல் | paal pongal


பொங்கல் என்பது கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. அந்த சிறப்பான பொங்கல் நாளில் கிராமத்து மக்கள் இந்த பால் பொங்கல்(வெள்ளை பொங்கல்) அல்லது சர்க்கரைப் பொங்கல் செய்து படைப்பது வழக்கமாகும். அந்த சுவையான பால் பொங்கல் செய்வதற்கான செய்முறை குறிப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்
  • புதிய பச்சரிசி – 1 கப்
  • பால் – 2 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • உப்பு – 1/4 தேக்கரண்டி
செய்முறை

அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து கழுவி, நீரை வடித்துவிட்டு வைக்கவும்.
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் பால் மற்றும் தண்ணீர் கலந்து கொதிக்க விடவும்.

தண்ணீர் மற்றும் பால் கொதித்து மேலே பொங்க வரும்பொழுது, நீரை வடித்து வைத்துள்ள அரிசியை சேர்த்து குறைவான தீயில் அரிசியை வேக விடவும்.

சாதத்தை அவ்வப்பொழுது கிளறிக் கொள்ள வேண்டும், இல்லயேனில் அடிப்பிடித்து விடும்.

சாதம் வெந்து நன்கு குழைந்தவுடன் உப்பு சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து விடவும்.

பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால்,தனியாக சிரித்து பாலைக் காய்ச்சி பொங்கலுடன் கலந்து விடவும்.

இப்போது சுவையான பால் பொங்கல் தயார்.

குக்கர் செய்முறை

குக்கரில் பால், தண்ணீர் மற்றும் கழுவி வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 விசில் வரை வேக விடவும்.
பின் வெந்த சாதத்தை கரண்டியால் மசித்துக் கொள்ளவும்.
இறுதியாக உப்பு சேர்த்து கலந்து படைக்கவும்.


படைக்கும் முறை


வாழை இலையை நன்கு கழுவி, துடைத்துக் கொள்ளவும்.பின் அதை சாமிக்கு முன்பாக வைத்து, அதில் பொங்கலை இரண்டு கரண்டி வைக்கவும்.
பொங்களுக்கு நடுவில் ஒரு சிறு குழி போல் செய்து, அதில் நெய் ஊற்றி அதன் மேல் பாதி உரித்த வாழைப் பழத்தை வைத்து சாமிக்கு படைக்கவும்.


குறிப்பு 


பழைய பச்சரிசி பயன்படுத்தினால் பால் அல்லது தண்ணீர் இன்னும் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளவும்.
குக்கரில் செய்வதை விட பாத்திரத்தில் செய்வது நல்லது
வெந்தய தோசை | vendhaya dosai

வெந்தய தோசை | vendhaya dosai


தேவையான பொருட்கள்
  • இட்லி அரிசி – 1 1 /2 கப்
  • வெந்தயம் – 1 / 4 கப்
  • உளுந்து – 1 /2 கப்
செய்முறை

இட்லி அரிசி, வெந்தயம், உளுந்து ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்.

தோசை மாவை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

குறிப்பு
இந்த தோசைக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.
ரவா இட்லி | rava idli

ரவா இட்லி | rava idli


தேவையான பொருட்கள்
  • வறுத்த ரவை(வெள்ளை ரவை) – 1 கப்
  • தயிர் – 2 கப்
  • காரட் – 1
  • பட்டாணி – 10
  • பச்சை மிளகாய் – 3
  • கடுகு – 1 / 2 தேக்கரண்டி
  • உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
  • கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
  • எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை

காரட், பச்சை மிளகாய் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, கடலை பருப்பு போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

பிறகு காரட், பட்டாணி, பச்சைமிளகாய் போட்டு வதக்கவும்.

வதக்கியவற்றை சிறிது நேரம் ஆற வைக்கவும்.

தயிரை நன்றாக அடித்துக் கொள்ளவும்.

ரவை,தயிர், உப்பு மற்றும் வதக்கிய காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக கலக்கவும்.

இந்த கலவையை குறைத்து 30 நிமிடங்கள் வைத்த பிறகு இட்லி பாத்திரத்தில் எண்ணெய் தடவி ஊற்றவும்.

15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

குறிப்பு
ரவா இட்லிக்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

Sunday, January 21, 2018

ஆப்பம்  | Aapam

ஆப்பம் | Aapam


தேவையான பொருட்கள்:
  • பச்சரிசி – 3 கப்
  • இட்லி அரிசி – 1 கப்
  • உளுத்தம்பருப்பு – 1 / 4 கப்
  • வெந்தயம் – 2 தேக்கரண்டி
  • தேங்காய் – 1 மூடி
செய்முறை:
பச்சரிசி, இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

இதனுடன் தேங்காய் சேர்த்து அரைக்கவும்.

அரைத்த மாவை குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைத்து ஆப்பம் ஊற்றவும்.
தக்காளி தோசை | tomato dosai tamil

தக்காளி தோசை | tomato dosai tamil


தேவையான பொருட்கள்:
  • தக்காளி ( பெரியது) – 3
  • பச்சரிசி – 1 கப்
  • இட்லி அரிசி – 1 கப்
  • உளுந்து – 1 தேக்கரண்டி
  • வெந்தயம் – 1 தேக்கரண்டி
  • சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் – 10
  • வரமிளகாய் – 3
  • பூண்டு – 2 பல்
  • கருவேப்பில்லை
  • உப்பு – தேவையான அளவு
செய்முறை:

பச்சரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் 3 மணி நேரம் ஊற வைக்கவும்.

இதனுடன் சீரகம், சின்ன வெங்காயம், வரமிளகாய், பூண்டு, கருவேப்பில்லை, உப்பு சேர்த்து தோசைக்கு அரைக்கும் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மாவை குறைந்தது 10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.