Monday, February 5, 2018

செட்டிநாடு மட்டன் குழம்பு|CHETTINAD MUTTON

தேவையான பொருட்கள்
மட்டன் – 1 /2 கிலோ
சின்ன வெங்காயம் – 20
தக்காளி – 2
பூண்டு – 10 பல்
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 2 – 3 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி அல்லது முந்திரிபருப்பு – 6
மசாலா தூள் – 2 மேசைக்கரண்டி(புதிதாக அரைத்தது)
மல்லித்தூள் – 1 மேசைக்கரண்டி

மசாலா தூள் ( புதிதாக அரைக்க)
தனியா – 2 மேசைக்கரண்டி
வரமிளகாய் – 8
சோம்பு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பட்டை – சிறு துண்டு
ஏலக்காய் – 2
கிராம்பு – 2

எண்ணெய் ஊற்றாமல் வதக்கி, பொடியாக அரைத்துக் கொள்ளவும்.

தேங்காய் விழுது

தேங்காய், கசகசா, ஒரு தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.




தாளிக்க
பட்டை – 1 /2 ” – 2
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பிரியாணி இலை – சிறிது
கருவேப்பிலை – சிறிது
சோம்பு – 1 தேக்கரண்டி

செய்முறை
  • மட்டனை கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • வெங்காயம், பொண்டு, தக்காளி ஆகியவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • குக்கரில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடு செய்யவும். தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
  • மட்டன், மஞ்சள்தூள் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
  • அரைத்து வைத்துள்ள மசாலா தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். இதனுடன் 3 கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும். மிதமான சூட்டில் அடுப்பை வைக்கவும்.
  • ஒரு விசில் வந்த பிறகு, சூட்டை குறைத்து மேலும் 12 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  • குக்கர் ஆவி அடங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது சேர்த்து மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.

SHARE THIS

Author: