Monday, February 5, 2018

நெத்திலி கருவாட்டுக் குழம்பு|FISH FRY CURRY COOKING TIPS TAMIL

தேவையான பொருட்கள்

நெத்திலிக் கருவாடு – 15

கத்திரிக்காய் – 1

முருங்கைக்காய் – 1

சின்ன வெங்காயம் – 6

தக்காளி சிறியது – ஒன்று

பச்சை மிளகாய் – 2

மொச்சைக் கொட்டை – 1 /4 கப்

புளி – 1 /2 நெல்லிக்காய் அளவு

மிளகாய் தூள் – 3 /4 மேசைக்கரண்டி

மல்லிதூள் – 1 மேசைக்கரண்டி

வெந்தயம் – 1/2 தேக்கரண்டி

உப்பு – 1 /2 தேக்கரண்டி

எண்ணெய் – 1 மேசைக்கரண்டி


செய்முறை
  • சின்ன வெங்காயத்தை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். கத்திரிக்காயை நான்கு துண்டுகளாக நறுக்கவும். முருங்கைக்காயை இரண்டு அங்குலத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நான்கு பாதியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மொச்சைக் கொட்டையை போட்டு 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • புளியில் 3 கப் தண்ணீர் ஊற்றி கரைத்து, பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள், உப்பு போட்டு கலக்கி வைக்கவும். அதிலேயே இரண்டாக கீறிய பச்சை மிளகாய், நறுக்கின தக்காளி, வறுத்து எடுத்த மொச்சை சேர்க்கவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெந்தயம் தாளித்து பின்னர்நறுக்கியசின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றவும்.
  • இதனுடன் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், முருங்கைக்காய் துண்டங்களை சேர்க்கவும்.
  • வாணலியை மூடி வைத்து சுமார் 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
  • அதன் பின்னர் கொதிக்கும் குழம்பில் கருவாட்டைச் சேர்த்து லேசாகக் கிளறி விடவும்.
  • கருவாடு வெந்து நல்ல மணம் வர ஆரம்பித்தவுடன் இறக்கவும்.

SHARE THIS

Author: