Tuesday, February 6, 2018

சிக்கன் குருமா|CHICKEN KURMA IN TAMIL

தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
கருவேப்பில்லை – சிறிது
மல்லிதழை – 1 /4 கட்டு
புதினா – 1 /4 கட்டு
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 2 தேக்கரண்டி
சிக்கன் மசாலா – 1 தேக்கரண்டி
பட்டை – 1 “
ஏலக்காய் – 2
கிராம்பு – 2


அரைக்க
தேங்காய் – 3 மேசைக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
முந்திரி – 5
சோம்பு – 1 /2 தேக்கரண்டி


செய்முறை
  • கசகசா,முந்திரியை சிறிது வெந்நீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊற வைத்து தேங்காய், சோம்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
  • பின் பச்சை மிளகாய்,கருவேப்பிலை,மல்லிதழை, புதினா , நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பிறகு இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • தக்காளி வதங்கியவுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் துண்டுகள், உப்பு, தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சிறிய தீயில் நன்கு வேக விடவும்.
  • சிக்கன் வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.

SHARE THIS

Author: