மட்டன் – 1 /2 கிலோ
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக அரிந்தது)
தக்காளி – 1 (பொடியாக அரிந்தது)
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 10
அரைக்க
வர கொத்தமல்லி – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 4
பட்டை – 1 அங்குலத்துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
சோம்பு – 1 /2 தேக்கரண்டி
கசகசா – 1 தேக்கரண்டி
செய்முறை
- மட்டனை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். குக்கரில் 2 கப் தண்ணீர் ஊற்றி மட்டன், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து 6 விசில் வரை வேக விடவும்.
- மட்டனை வடித்து தண்ணீரை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் ஊற்றாமல் வறுத்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கருவேப்பிலை தாளித்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- பின் இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், 1 தேக்கரண்டி மிளகுதூள் சேர்த்து வதக்கவும்.
- பின்னர் மட்டன் , தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- அரைத்த மசாலா தூள், உப்பு சேர்த்து சிறிது நேரம் சிறிய தீயில் வைக்கவும்.
- மட்டன் வேக வைத்த தண்ணீர் மற்றும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- குழம்பு திக்ககும் வரை மிதமான தீயில் நன்கு வேக விடவும்.
- மீதமுள்ள மிளகுதூள் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.