Monday, February 5, 2018

நாட்டுக் கோழிக் குழம்பு|NATTU KOLI KULAMBU

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/2 கிலோ
பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2
பொடியாக நறுக்கிய தக்காளி – 3
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
பூண்டு – 8
இஞ்சி – 50 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 2 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
பிரிஞ்சி இலை – 1
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 2 தேக்கரண்டி
தேங்காய் – 1 /2 மூடி
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செய்முறை

  • இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • சுத்தம் செய்த சிக்கனை சிறு துண்டுகளாக்கி, கத்தியால் அங்குமிங்குமாகக் கீறி, அதன் மேல் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு, 1/2 எலுமிச்சம் பழம் பிழிந்து நன்கு பிசறி தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை, 1/2 தேக்கரண்டி சோம்பு, சேர்த்து தண்ணீர் விடாமல் மைப்போல் அரைத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும், பிரிஞ்சி இலை, 1/2 தேக்கரண்டி சோம்பு சேர்த்து பொரித்து, வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  • பின் அரைத்து வைத்துள்ள இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
  • பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • பிசறி வைத்துள்ள சிக்கனைச் சேர்த்து தண்ணீர் விடாமல் வேக விடவும்.
  • சிக்கன் முக்கால் பாகம் வெந்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலாவைக் கலந்து தண்ணீர் தெளித்து தொடர்ந்து வேக விடவும்.
  • இதனுடன் கறிவேப்பிலை, காரத்திற்கு ஏற்றாற்போல் பச்சை மிளகாய் , உப்பு சேர்த்துவேக விடவும்.
  • மல்லித்தழை தூவி சாதத்துடன் பரிமாறவும்.

SHARE THIS

Author: