Tuesday, February 20, 2018

பகோடா மோர்க் குழம்பு | PAKODA MOR KUZHAMBU

பகோடா மோர்க் குழம்பு | PAKODA MOR KUZHAMBU


வேண்டியவைகள்
பகோடா தயாரிக்ககடலைமாவு—-6 டேபிள் ஸ்பூன்
பெறிய வெங்காயம் —1 பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
மிளகாய்ப் பொடி—-கால் டீஸ்பூன்
உப்பு—-கால் டீஸ்பூன்
எண்ணெய்—-பொறிப்பதற்கு வேண்டிய அளவு
மோர்க் குழம்பிற்கு வேண்டியவைகள்
கெட்டியான மோர்——3 கப்பிற்கும் மேல்
கடலைப் பருப்பு—-1டேபிள்ஸ்பூன்
தனியா—-2 டீஸ்பூன்
கடுகு—-1 டீஸ்பூன்
பச்சைமிளகாய்—–3
வற்றல் மிளகாய்—1
தேங்காய்த் துருவல்—1 டேபிள்ஸ்பூன்
தாளிக்க—-கடுகு, சிறிது பெருங்காயம்
மஞ்சள்ப் பொடி—–சிறிது
ருசிக்கு—-உப்பு

செய்முறை
  • கடலைப்பருப்பு,தனியா.கடுகை ஊரவைத்து பச்சைமிளகாய்,  தேங்காய்த்துருவல்,வற்றல் மிளகாய் சேர்த்து மிக்ஸியில்
  • திட்டமாக ஜலம் சேர்த்து மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதை மோருடன் உப்பு, மஞ்சள்ப்பொடி சேர்த்து  கரைத்து வைக்கவும்.
  • கடலைமாவுடன், நறுக்கிய வெங்காயம்,உப்பு, மிளகாய்ப்பொடி  சேர்த்துக் கலந்து ஜலம் விட்டுத் தளரப் பிசைந்துகொள்ளவும்.
  • சற்று லூஸாக இருக்கட்டும்.
  • வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக், கலந்த மாவை  பகோடாக்களாக உருட்டிப் போட்டு பொன்நிறமாகப்
  • பொறித்தெடுக்கவும். ஷேப்பைப் பற்றிக் கவலை வேண்டாம்.
  • மோர்க் கலவையை குழம்பு வைக்கும் பாத்திரத்தில் கொட்டி 
  • மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.
  • பொறித்தெடுக்கும் போதே பகோடாக்களைக் குழம்பில் சேர்த்து  விடவும்.
  • நல்ல பால் பொங்குவதுபோல் நுறைத்து வரும்போது கிளறி  தீயை மட்டுப்படுத்தி இரண்டு நிமிஷங்கள் மேலும்  வைத்திருந்து குழம்பை இறக்கவும்.
  • கடுகு, பெருங்காயம் தாளித்து மூடி வைக்கவும்.
  • பகோடா மிருதுவாக ஆகி, குழம்பும் சாப்பிட தயாராகிவிடும்.
  • இருக்கவே இருக்கிறது கொத்தமல்லி,கறிவேப்பிலை.
  • மேலே தூவுங்கள். காரம் அதிகரிக்க மிளகாயை தாளிப்பில்  சேர்க்கவும்.
  • வேண்டுமானவைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
காளன் | KALAN KERALA RECIPE IN TAMIL

காளன் | KALAN KERALA RECIPE IN TAMIL


இதுவும் மோர்க் குழம்பு வகையைச் சேர்ந்ததுதான். ஆனால் ருசி
சிறிது வித்தியாஸப்படும் கேரள வகைச் சமையல்.
குறிப்பாக வாழைக்காய், சேனைக்கிழங்கு சேர்த்துச் செய்யப்படுவது.
அவர்கள் பாணி விருந்து சமையலில் கட்டாயம் இது இடம் பெறும்.
இது மிகவும் வித்தியாஸமான பாணியில் இருக்கும்
என்றுநினைத்திருந்தேன். அப்படி அதிகம் ஒன்றுமில்லை. அல்லது எனக்குத் தெரிந்த பாணி  இதுஎன்று நினைத்துக் கொள்ளுங்கள்.
அதிகம் ஸாமானில்லை. காயும் ஸிம்பிளாக ஒரு வாழைக்காய்,
100 கிராம் சேனைக் கிழங்கு இருந்தால் போதும்.
மற்ற வேண்டிய ஸாமான்கள் பார்க்கலாம்.

தயிர்—-2கப். அதிக புளிப்பு வேண்டாம்.
மிளகாய்—-வற்றல் ஒன்று
பச்சை மிளகாய்—2
மிளகுப்பொடி—கால் டீஸ்பூன் அல்லது மிளகாய்ப்பொடி
சீரகம்—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்—அரை கப்பிற்கு அதிகம்.
ருசிக்கு உப்பு
தாளித்துக் கொட்ட—கடுகு,வெந்தயம், கறிவேப்பிலை
தேங்காயெண்ணெய்—1 டீஸ்பூன்
பச்சை கறிவேப்பிலை சிறிது.
பச்சரிசி—கால் டீஸ்பூன்.

செய்முறை
  • காய்களை, ஒரு அங்குல நீளத்திற்கு தோல் சீவி நறுக்கி  சுத்தப்படுத்தி வைக்கவும்.
  • தேங்காய்த் துருவலுடன் அரிசியைப் பிசரி வைக்கவும். அரைக்க எளிதாக இருக்கும்.
  • சிறிது நேரம் கழித்து ,பச்சைமிளகாய்,சீரகம்சேர்த்து தேங்காயை நன்றாக அரைத்து வைக்கவும். மிக்ஸியில்தான்.
  • காயை தண்ணீர் விட்டு மிளகு, அல்லது மிளகாய்ப்பொடி,சிறிது,உப்பு சேர்த்துவேக வைக்கவும்.
  • வேக வைத்த காயை வடிக்கட்டி வைக்கவும்.
  • தயிரைக் கடைந்து அரைத்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும்
  • காயில் சிறிது உப்பு போட்டிருப்பதால் தயிரில் திட்டமாக உப்பைப் போடவும்.
  • காயுடன் சேர்த்து, கடைந்த தயிரைத் திட்டமான தீயில் பால்  பொங்குவது போல ஒருகொதிவிட்டு இறக்கவும். அவசியமானால்
  • சிறிது தண்ணீர் முதலிலேயே சேர்க்கவும்.
  • தேங்காயெண்ணெயில் கடுகு,வெந்தயம்,மிளகாய் வற்றலை  தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை சேர்க்கவும்.
  • காளன் ரெடி. ஒரு முறை நன்றாகக் கிளறிவிடவும்.
  • சாதத்துடனும், விருப்பமானவற்றுடனும், சேர்த்துச் சாப்பிடலாம்.  பாருங்கள். எப்படி என்று?
  • நான் வெண்டைக்காயை எண்ணெயில் வதக்கிப் போட்டு செய்தேன்.
  • ருசிதான் அதுவும். மிளகுப்பொடிக்கு பதில் மிளகாய்ப்பொடி  சேர்த்தேன். கலர் வந்திருக்கிரது.
காரக்குழம்பு | KARA KULAMBU

காரக்குழம்பு | KARA KULAMBU


வேண்டியவைகளைப் பார்ப்போம்.
அரைப்பதற்கு
வெங்காயம்—-ஒன்று. ஸாம்பார் வெங்காயமானால் எண்ணிக்கையில்
ஏழு அல்லது எட்டு. தோல் நீக்கவும்.
தக்காளிப்பழம்—-ஒன்று
உரித்த பூண்டு இதழ்கள்—5
மிளகு—8.
கரைக்க— புளிஒரு பெரிய நெல்லிக்காயளவு
பொடிகள்
ஸாம்பார்பொடி—1 டீஸ்பூன்
வெந்தயப்பொடி—கால் டீஸ்பூன்.
தாளித்துக் கொட்ட
கடுகு,உளுத்தம் பருப்பு—சிறிதளவு
பெருங்காயம்—சிறிது
மிளகாய் வற்றல்—1
நல்லெண்ணெய்—-4 டீஸ்பூன்.
வாஸனைக்கு—கரிவேப்பிலை
ருசிக்கு—உப்பு

செய்முறை.
  • புளியை நன்றாக ஊற வைத்து ஒரு கப் அளவிற்குக் கரைத்துக் கொள்ளவும்.
  • அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் தண்ணீர் விடாது அரைத்துக்கொள்ளவும்.
  • புளித் தண்ணீரில் அரைத்ததைச் சேர்த்துக் கரைக்கவும்.திட்டமாக உப்பு சேர்க்கவும்.
  • ஸாம்பார்பொடி,வெந்தயப் பொடியையும் சேர்க்கவும்.
  • குழம்புப் பாத்திரத்தில் எண்ணெயைச் சூடாக்கி,தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்துக் கொட்டி, புளிக் கலவையை சேர்த்துக் கொதிக்க விடவும். 
  • பாதியளவாகச் சுண்டி வரும்போது இறக்கிவைத்து கறிவேப்பிலையால் அலங்கரிக்கவும். வாஸனையாகவும் இருக்கும், அழகாகவும் இருக்கும். எல்லாவற்றுடனும் சேர்த்து விருப்பம் போலச் சாப்பிடலாம். 
  • இருக்கும் ஸாமான்களை வைத்தே காரக் குழம்பாம். மிக்க நன்றாக இருக்கிறதென்று செலவாயிற்று. 
  • நீங்களும் செய்யலாமே. காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய் அதிகப்படுத்தவும்.

Monday, February 19, 2018

கருவேப்பிலைக் குழம்பு  | Curry Leaves kulambu | IYENGAR SAMYAL

கருவேப்பிலைக் குழம்பு | Curry Leaves kulambu | IYENGAR SAMYAL



தேவையான பொருட்கள்:
கருவேப்பிலை – 1/2 கப்

துவரம் பருப்பு – 2 ஸ்பூன்

கடலைப் பருப்பு – 1 ஸ்பூன்

தணியா – 5 ஸ்பூன்

மிளகாய்- 8

மிளகு – 1 ஸ்பூன்

சுக்கு – சிறு துண்டு

வெந்தயம் – 1 ஸ்பூன்

கொப்பரை – 3 ஸ்பூன் விரும்பினால்

புளி – எலுமிச்சை அளவு

உப்பு – தேவைக்கேற்ப

பெருங்காயம்-சிறிது

மஞ்சள் தூள்

தாளிக்க

நல்லெண்ணை ,கடுகு,உளுத்தம் பருப்பு,கருவேப்பிலை

தயார் செய்யும் முறை:

  • புளியை ஊற விடவும்.
  • வாணலியில் துவரம் பருப்பு,கடலைப் பருப்பு,தணியா,மிளகாய்,மிளகு,சுக்கு,வெந்தயம்,பெருங்காயம்,கொப்பரை,கருவேப்பிலை வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். 
  • வாணலியில் நல்லெண்ணை ஊற்றி,கடுகு,உளுந்து,கருவேப்பிலை தாளித்து,புளியை கரைத்துஊற்றி,மஞ்சள் தூள் சேர்க்கவும்.
  • கொதித்தவுடன் அரைத்த மசாலாவை போட்டு,உப்பு சேர்க்கவும். எண்ணை கசிந்து மேலே வந்ததும் இறக்கவும்.
  • கருவேப்பிலை தூவி பறிமாறவும்.கருவேப்பிலைக் குழம்பு செறிமானத்தை தூண்டும்.பித்தம் சரி செய்யும்.

எத்தனை நபர்களுக்கு:
1-5 நபர்கள் வரை
தயாரிக்க ஆகும் கால அளவு:
15 முதல் 30 நிமிடங்கள்
சன்னா பிரியாணி | IYENGAR IN TAMIL RECIPES

சன்னா பிரியாணி | IYENGAR IN TAMIL RECIPES


தேவையான பொருட்கள்:

சன்னா வெள்ளை – 150 கிராம்

வெங்காயம் பெரியது – 1

தக்காளி – 2

இஞ்சி – சிறு துண்டு

பூண்டு – 6 பல்

உப்பு – தேவைக்கு

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய்த்துள் – 1 ஸ்பூன்

கரம் மசாலா – 1 ஸ்பூன்

தயிர் – 1 குழிக்கரண்டி

புதினா இலை – சிறிது

பாசுமதி அரிசி கழுவி வடித்தது உதிரியாக – 200 கிராம்

தாளிக்க

பட்டை,லவங்கம்,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி,நெய் – 1ஸ்பூன் ,எண்ணைய் -தேவைக்கு

அலங்கரிக்க
வட்டமாக அரிந்த வெங்காயம்,தக்காளி,எலுமிச்சம் பழம்,கொத்தமல்லி,புதினா

விரும்பினால் காய்கறிகள் காரட் ,உருளை சேர்க்கலாம்.

தயார் செய்யும் முறை:

  • வெள்ளை சன்னாவை 6 மணிநேரம் ஊறவைத்து உப்பு போட்டுவேகவைக்கவும்.
  • பின்னர் பாசுமதி அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊறவைத்து உதிரி உதிரியாக சாதம் வடிக்கவும்.ஆற விடவும்.
  • பின் வெங்காயம்,தக்காளி,இஞ்சி,பூண்டு இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். 
  • வாணலியில் எண்ணை,நெய் கலந்து சூடு செய்து லவங்கம்,பட்டை,எலக்காய்,பிரியாணி இலை,முந்திரி தாளித்து, அரைத்த விழுதை சேர்த்து, வதக்கவும்.மஞ்சள் தூள்,மிளகாய்த் தூள்,கரம் மசாலாத்தூள் சேர்த்து உப்பு சேர்த்து வதக்கவும்.
  • தயிர் சேர்க்கவும்.புதினா,வேகவைத்த சன்னா சேர்த்து கிளறி,இறுதியில் சாதம் சேர்த்து கிளறவும். 
  • கொத்தமல்லி,புதினா வட்ட வெங்காயம்,தக்காளி கொண்டுஅலங்கரிக்கவும்.பிரியாணி ரெடி.

Sunday, February 18, 2018

சுண்டைக்காய் வற்றல் குழம்பு | SUNDAKKAI VATHAL KULAMBU

சுண்டைக்காய் வற்றல் குழம்பு | SUNDAKKAI VATHAL KULAMBU


புளி—1 எலுமிச்சை அளவு
சுண்டை வற்றல்—-15
வறுக்க—நல்லெண்ணெய்—4 டேபில் ஸ்பூன்
வறுத்தரைக்க சாமான்கள்—
மிளகாய் வற்றல்—3
மிளகு—-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு—1டீஸ்பூன், தனியா–2 டீஸ்பூன்
அரிசி—அரை டீஸ்பூன்
தேங்காய்த் துருவல்–2 டேபிள் ஸ்பூன்
தாளித்துக் கொட்ட-
1 டீஸ்பூன் கடுகு,
அரை டீஸ்பூன்—-வெந்தயம்
பெருங்காயம்—சிறிது
வேர்க்கடலை—–2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
ருசிக்கு—உப்பு, துளி வெல்லம்
மஞ்சள் பொடி—அரைடீஸ்பூன்

செய்முறை:
  • புளியை ஊற வைத்து, 2, 3 கப் அளவிற்கு  சாறு எடுத்துக் கொள்ளவும
  • சிறிது எண்ணெயில் வறுக்கக் கொடுத்தவைகளை சிவக்க  வறுத்து , தேங்காயையும் போட்டுப் பிறட்டி ஆறியவுடன்  மிக்ஸியிலிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வைத்துக்  கொள்ளவும். 
  • குழம்புப் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் பெருங்காயம், நிலக்கடலை, தாளித்து, கறிவேப்பிலையை  வதக்கி புளி ஜலத்தைச் சேர்த்து கொதிக்க விடவும்.
  • உப்பு, வெல்லம் மஞ்சள் சேர்த்து புளிவாஸனை போனவுடன்
  • அரைத்த விழுதை திட்டமாகக் கரைத்துவிட்டுக் கொதிக்க விடவும்.
  • மிகுதி எண்ணெயில் சுண்டைக்காய் வற்றலை நிதானமான தீயில் நன்றாக வறுத்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டி இறக்கவும்.
  •  காரம் அதிகம் வேண்டுமானால் மிளகாய் அதிகம் சேர்க்கவும்.
பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு | GARLIC CURRY LEAVES KUZHAMBU

பூண்டு கறிவேப்பிலைக்குழம்பு | GARLIC CURRY LEAVES KUZHAMBU


வேண்டியவைகள்.
பூண்டு—100 கிராம். தோலை உரித்து வைத்துக் கொள்ளவும்.
ஸாம்பார் வெங்காயம்–100 கிராம்
தக்காளி—2 அல்லது 3
கடுகு–அரை டீஸ்பூன்
வெந்தயம்—அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு–1– டீஸ்பூன்
கடலைப்பருப்பு—2 டீஸ்பூன்
பெருங்காயம்—சிறிது
நல்லெண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்.
வற்றல்மிளகாய்—2 இவைகள் எல்லாம்.தாளித்துக் கொட்டுவதற்கு.
வேண்டிய பொடிகள்
தனி மிளகாய்ப்பொடி—1 டீஸ்பூன்
தனியாப்பொடி—-4 டீஸ்பூன்
மஞ்சள் பொடி—1 டீஸ்பூன்
புளி—1 பெறிய நெல்லிக்காயளவு.
ருசிக்கு உப்பு
உருவின பச்சை கறிவேப்பிலை–கால்க்கப்பிற்கு அதிகமாகவே
இருக்கலாம்

1 மேலே தூவ சிறிது கறிவேப்பிலை பாக்கி வைத்து விட்டு சிறிது
எண்ணெயில் கறிவேப்பிலையை வறுத்து வைக்கவும்.
2 புளியைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.கறைத்து சாரெடுக்கவும்.
3 சின்ன வெங்காயத்தை உறித்து ஒன்றிரண்டாக மிக்ஸியில்
போட்டு சுற்றி எடுக்கவும்.

4 தக்காளிப் பழத்தை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
5. குழம்புப் பாத்திரத்தை காஸில் வைத்துச் சூடாக்கி எண்ணெயை விடவும்.
6 எண்ணெய் காய்ந்ததும் கடுகு மிளகாயைப் போட்டு, கடுகு வெடித்ததும்
பருப்புகள் வெந்தயம் சேர்த்து சிவக்க வறுத்து, வெங்காயம், பூண்டு
சேர்த்து நன்றாக வதக்கவும். பெருங்காயம் சேர்க்கவும்.
7 தக்காளியைச் சேர்த்து வதக்கி மிளகாய்,தனியா, மஞ்சள்பொடி
வகையைச் சேர்த்துப் பிரட்டி புளி ஜலம், உப்பைச் சேர்த்து நன்றாகக்
கொதிக்க விடவும்.

பூண்டு வெந்து , பொடி வாஸனைகள் அடங்கி, குழம்பு திக்காக வரும்
பொழுது கறிவேப்பிலை பொடித்ததைச் சேர்க்கவும்.
குழம்பு நீர்க்க இருக்கும் போலிருந்தால் ஒரு டீஸ்பூன் அரிசிமாவை
தண்ணீரில்க் கரைத்து சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும்.
கமகமவென்று குழம்பு தயார்.மிகுந்த கறிவேப்பிலையைத் தூவவும்
சாதத்துடன் சாப்பிடவும், மற்றும் வேண்டியவைகளுடன் சாப்பிடவும்

ருசியான குழம்பு தயார்.  வேண்டுமானால் துளி வெல்லம் போடலாம்.
ருசித்து பார்த்து எழுதுங்கள்.
நெத்திலி மீன் தொக்கு | NETHILI MEEN SAMYAL

நெத்திலி மீன் தொக்கு | NETHILI MEEN SAMYAL


தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 300 கிராம் 
எண்ணெய் – 1/4 கப் + 1/4 கப் 
வெந்தயம் – 1 டீஸ்பூன் 
பூண்டு – 2 பற்கள் (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன் 
மல்லித் தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன் 
உப்பு – தேவையான அளவு 
புளிச்சாறு – 4 டேபிள் ஸ்பூன் 
கறிவேப்பிலை – 1 கைப்பிடி 
அரைப்பதற்கு… 
சின்ன வெங்காயம் – 20 (தோலுரித்தது) 
தக்காளி – 2 (பெரியதாக நறுக்கியது) 
பூண்டு – 10 பற்கள் 
மிளகு – 1 டீஸ்பூன் 
பச்சை மிளகாய் – 2 

செய்முறை
  • முதலில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் நெத்திலி மீனை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
  •  பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/4 கப் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெந்தயம், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். 
  • பின்பு அதில் தேவையான அளவு உப்பு மற்றும் மசாலாப் பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும். 
  • பிறகு அதில் புளிச்சாற்றினை ஊற்றி கிளறி, குழம்பானது மசாலா போன்று சற்று கெட்டியாக வரும் போது, அதில் நெத்திலி மீனை சேர்த்து பிரட்டி, 5-8 நிமிடம் மூடி வைத்து வேக வைக்க வேண்டும். 
  • அடுத்து அதில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, மீண்டும் 5-8 நிமிடம் வேக வைக்க வேண்டும். 
  • மீன் நன்கு மென்மையாக வெந்ததும், அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தூவி குறைவான தீயில் பிரட்டி, எண்ணெய் தனியாக பிரியும் வரை வேக வைத்து இறக்கினால், நெத்திலி மீன் தொக்கு ரெடி!!!
சருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா|FACIAL TIPS TAMIL

சருமத்தை பாதுகாக்க ஃபேஷியல் அவசியமா|FACIAL TIPS TAMIL


ஃபேஷியல் எனப்படும் முகப்பூச்சு சரும பாதுகாப்பிற்கு வரப்பிரசாதமாக விளங்குகிறது. நம் சருமத்தின் துவாரங்களை சுத்தபடுத்தி, சருமதிற்கு தேவையான சத்துக்களை சேர்க்க இது வெகுவாக உதவுகின்றது. ஃபேஷியல் மூலம் சரும துவாரங்கள் சுத்தமாகி, அசுத்த அணுக்கள் நீங்கி தூய்மையான தோற்றதிற்கு வழிவகுத்து, நம் பொலிவை கூட்டுகிறது.

ஆதலால் தான் உடல் மசாஜ்க்கு பிறகு ஃபேஷியல் சருமதிற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகின்றது. அசுத்தங்களை நீக்குவதால் இது டீப் க்ளென்ஸிங் ஃபேஷியல் மற்றும் டீப் போர் க்ளென்ஸிங் என்று இருவகையாகவும் கூறப்படுகின்றது.

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஃபேஷியல் மிகவும் பயனுள்ளது என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெய்யிலினால் ஏற்படும் சரும பாதிப்புகள், சருமத்தின் அழுகிய அணுக்கள், முகசுருக்கங்கள், சருமத்தில் மூப்பின் சுவடுகள், முகத்தில் தோன்றும் தேமல்கள் இவை அனைத்தையும் போக்க ஃபேஷியல் ஒரு சிறந்த சிகிச்சை ஆகும் என கூறினாலும் மிகையாகாது.

25 வயது தொடங்கும் பொழுது சருமத்தில் வயதின் பாதிப்புகள் தோன்ற தொடங்குகின்றன.

ஆக இதுவே ஃபேஷியலை தொடங்க சரியான வயது எனலாம்.

க்ளென்ஸிங் என்ற சுத்தபடுத்தும் திரவத்தால், முகத்தை சுத்தபடுத்தும் பொழுது, உடனே முகம் அழுக்குகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுகின்றது. இது நன்றாக சருமத்தின் ஆழத்தில் ஊடுருவதால் சருமத்தின் ரத்தஓட்டம் சீராக்கபட்டு, மாசுக்களையும், அழுக்குகளையும் உடனே நீங்க செய்கிறது. இதே நேரம் டோனிங் மூலம் புதிய சரும அணுக்கள் உருவாகி முகத்திற்கு உறுதியும், நெகிழ்வும் அளிக்கப்படுகிறது.

சருமம் நன்றாக சுவாசிக்கவேண்டி, ஆன்ட்டி-ஆக்ஸிடெண்ட் என்ற பொருளால், அழுக்குகள், அழுகிய சரும அணுக்கள் ஆகியவை நீக்கப்படுகின்றன. இவ்வாறு செய்கையில், பழைய அழுக்குகள் நீங்கி புது பொலிவும், புத்துணர்வும் சருமத்திற்கு கிடைக்கிறது. இந்த முறையால் அடைபட்ட துவாரங்களை சுத்தபடுத்தி, சருமம் எந்த பாதிப்புக்கும் ஆளாகாமல், பொலிவு பெற ஏதுவாகிறது.

ஃபேஷியலின் சுகமான ஒரு பகுதி மசாஜ் ஆகும். ஒரு லயதிற்குட்பட்டு முகத்தில் புரியும் அழுத்தங்களினால் முக தசைகள் இறுக்கம் தளர்ந்து லேசாகின்றன.

இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து, சருமத்திலிருந்து கழிவுகளை வெளியேற்றி, முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல் பேணப்படுகின்றது.

வெள்ளையாக்க, உறுதியாக்க, விட்டமின் சி நிறைந்த பல மாஸ்குகள் கிடைக்கின்றன. முகத்தின் உபரி எண்ணெய் நீங்க, துவாரங்கள் இறுக்கமாக, சருமத்தில் ஈரப்பதம் சேர்க்க என மாஸ்குகள் பல விதத்தில் பயன்படுகின்றன. மூலிகை மாஸ்குகளும் புதிய சரும அணுக்கள் உற்பத்திக்கு பெரும் உதவி செய்கின்றன.

Friday, February 9, 2018

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்|THOPPAI KURAIYA TAMIL

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள்|THOPPAI KURAIYA TAMIL

வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை பின்பற்றுவது தான். இத்தகைய வாழ்க்கை முறையை யாரும் கட்டாயப்படுத்தி வாழ வேண்டும் என்று சொல்வதில்லை. நாமே தான் அத்தகைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையை வெளியுலகத்திற்காக தேர்ந்தெடுத்து வாழ்ந்து வருகிறோம்.

மேலும் பலர் ஆரோக்கியமற்றது என்று தெரிந்தும் இன்றும் அதனைப் பின்பற்றுகின்றனர். இவ்வாறு தேர்ந்தெடுத்து பின்பற்றிவிட்டு, பின்னர் குத்துதே குடையுதே என்று பெரிதும் அவஸ்தைப்படுவோர் அதிகம். ஆனால் இத்தகைய தொப்பையை குறைப்பது என்பது மிகவும் எளிது தான்.

அதற்கு முதலில் செய்ய வேண்டியது எல்லாம் ஜங்க் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில் உடற்பயிற்சி செய்வது தான். இதனால் அதிகப்படியான உடல் எடை குறைவதோடு, வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை எளிதில் குறைக்கலாம்.

ஏனெனில் உடற்பயிற்சியானது ஒரு குறிப்பிட்ட பாகத்திற்கு மட்டும் என்பதில்லை. பொதுவாக உடற்பயிற்சி செய்தால், உடல் முழுவதுமே அப்பயிற்சியில் ஈடுபடுவதால், நிச்சயம் உடல் எடையுடன், தொப்பை என்று சொல்லப்படும் பெல்லி குறையும். அதற்கு தினமும் உடற்பயிற்சியுடன், ஒருசில தொப்பையையும் மேற்கொள்ள வேண்டும்.

அத்தகைய டயட்டை கீழேக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, உடற்பயிற்சியுடன் சேர்த்து, இதையும் பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் குறைக்க முடியும். சரி, அதைப் பார்ப்போமா!!!

1. தண்ணீர்: தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடல் வறட்சியில்லாமல் இருப்பதோடு, உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். மேலும் அவ்வப்போது சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

2. உப்பை:தவிர்க்கவும் உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும். எனவே உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை அறவே தவிர்க்க வேண்டும். வேண்டுமெனில் அதற்கு பதிலாக உணவில் சுவையைக் கூட்டுவதற்கு மூலிகைகள் மற்றும் மசாலாக்கள் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

தேன்: வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, சர்க்கரையும் ஒரு காரணம். எனவே உண்ணும் உணவுப் பொருளில் சர்க்கரைக்கு பதிலாக தேனை சேர்த்துக் கொண்டால், தொப்பையை குறைவதோடு, உடல் எடையும் குறையும்.

3. பட்டை: தினமும் காலையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதில் சிறிது பட்டை தூளை சேர்த்து கலந்து குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும் ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

4. நட்ஸ்: உடல் எடையை குறைக்க வேண்டுமெனில் உடனே கொழுப்புள்ள உணவுப் பொருட்கள் அனைத்தையும் நிறுத்திவிடுவோம். உண்மையில் அது தவறான கருத்து. ஏனெனில் உடலுக்கு ஆரோக்கியமான கொழுப்புக்கள் கிடைக்க வேண்டியது மிகவும் இன்றியமையாதது. அத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் அதிகம் உள்ளது. எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் வால்நட், பாதாம், வேர்க்கடலை போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் நல்லது.


5. அவகேடோ: அவகேடோவிலும் உடலுக்கு வேண்டிய கொழுப்பானது அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை சாப்பிட்டால், அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள், வயிற்றை நிறைத்து, அடிக்கடி பசி ஏற்படுவதை தடுக்கும்.

6. சிட்ரஸ்: பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

7. தயிர்: தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

8. க்ரீன் டீ: அனைவருக்குமே க்ரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும் என்பது தெரியும். மேலும் பலரும் இந்த க்ரீன் டீயின் பலனைப் பெற்றுள்ளனர். எனவே தினமும் ஒரு டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.

9. சால்மன் மீன்: சால்மன் மீனில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது. இது உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் இன்றியமையாத ஒரு கொழுப்பாகும். ஆகவே இந்த மீனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், நாள் முழுவதும் வயிறு நிறைந்திருப்பதோடு, தொப்பை வராமலும் தடுக்கும்.

10. பெர்ரிப் பழங்கள்: பெர்ரிப் பழங்கள் கொழுப்பைக் குறைக்கும் ஒரு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் அதில் வைட்டமின் சி என்னும் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால், பெல்லியால் அவஸ்தைப்படுபவர்கள், பெர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட்டால், நல்ல பலனை விரைவில் பெறலாம்.

11. ப்ராக்கோலி: ப்ராக்கோலியிலும், மன அழுத்தத்தை அதிகரிக்கும் கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்தும் வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் பொருளானது உள்ளதால், பெல்லி பிரச்சனை உள்ளவர்கள் ப்ராக்கோலியை அதிகம் சாப்பிடுவது நல்லது.

12. எலுமிச்சை சாறு: வயிற்றைச் சுற்றியிருக்கும் தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது தான். அதிலும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அதில் சிறிது உப்பு மற்றும் தேன் சேர்த்து குடித்தால், நிச்சயம் தொப்பை குறையும். அதிலும் இந்த செயலை தொடர்ந்து 1 மாதம் செய்து வந்தால், இதற்கான பலன் உடனே தெரியும்.

13. பூண்டு: எலுமிச்சை சாற்றினை விட இரண்டு மடங்கு அதிகமான சக்தியானது பூண்டில் உள்ளது. எனவே காலையில் 1 பல் பூண்டு சாப்பிட்டால், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, உடலில் இரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

14. இஞ்சி: உணவுகளில் இஞ்சியை அதிகம் சேர்த்தால், அது தொப்பையை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதில் அதிகப்படியான ஆன்டிஆக்ஸிடன்ட்டுகளானது நிறைந்திருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைத்து, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மேற்கூறிய அனைத்தையும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், நிச்சயம் தொப்பையை மற்றும் உடல் எடை விரைவில் குறையும். ஆனால் நம்பிக்கையின்றி மேற்கொண்டால், அதற்கான பலன் நிச்சயம் கிடைக்காது.
இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள|THOPPAI KURAIYA VALIGAL

இடுப்பை ‘சிக்’கென்று வைத்துக்கொள்ள|THOPPAI KURAIYA VALIGAL

* காலையில் டீ, காபி குடிப்பதைத் தவிர்த்து, சுடு தண்ணீரில் எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து குடிக்கலாம்.

• பூசணிக்காய், வாழைத்தண்டு இவற்றுக்கெல்லாம் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை அதிகம். எனவே, ஒரு நாள் வாழைத் தண்டு சாறு, மறுநாள் பூசணிக்காய் சாறு என்று மாற்றி மாற்றி வெறும் வயிற்றில் அருந்தலாம்.

• நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைச் சாப்பிடலாம்.

• எண்ணெயில் பொரித்த உணவுகளை அறவே தவிர்க்கலாம். வேக வைத்த உணவுகளைச் சாப்பிடுவது நல்லது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை அதிக அளவு சேர்த்துக் கொள்ளலாம்.


• அதிக கலோரி உள்ள உணவுப் பொருட்களைத் தொடவே வேண்டாம். நொறுக்குத் தீனி ஆசையைத் தடுக்க முடியாவிட்டால்… அவல், அரிசிப்பொரி, காய்கறி சாலட் சாப்பிடலாம்.

• சாப்பிட்டு முடித்தவுடன் 10 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீர் அருந்தலாம்.

• தினமும் உணவில் 2 டீஸ்பூன் ‘கொள்ளு’ சேர்ப்பது, உடலில் அதிக கொழுப்பு சேர விடாமல் தடுக்கும்.

• டி.வி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது கூடாது. இதனால், சாப்பாட்டின் அளவு தெரியாமல் போய்விடும்.

• தினமும் ஒரு சிறிய வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிடுவது, ரத்தத்தில் தங்கியிருக்கும் கொழுப்பை சரிசெய்துவிடும்.
ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

ஆந்திரா இறால் குழம்பு|ANDHRA PRAWN CURRY IN TAMIL

தேவையான பொருட்கள்
உரித்து, குடல் நீக்கிய இறால் – 1/2 கிலோ
இஞ்சி, பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 1/4 கிலோ
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி
தனியாத்தூள் – 3 தேக்கரண்டி
சோம்பு – 1 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 3
தேங்காய் – 1 /2 மூடி
புளி – 1 கோலி குண்டு அளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – 2 கொத்து


செய்முறை
  • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன் நிறமாக வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கிக் கொள்ளவும்.
  • பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • பின் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள், தனியாத்தூள்,சிறிது தண்ணீர் மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள இறாலைச் சேர்த்து வேக விடவும்.
  • இறாலை ஆவியில் வேக வைத்தும் பயன்படுத்தலாம்.
  • இதனுடன் அரைத்து வைத்துள்ள தேங்காய், விதை நீக்கிய காய்ந்த மிளகாய், தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்.
  • நன்கு கொதித்து வந்தவுடன், புளியைச் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். சுவையான இறால் குழம்பு தயார்.

Thursday, February 8, 2018

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது|HOPPAIYAIK KURAIKKA VALIKAL THOPPAI KURAIYA IN TAMIL

40 வயதிற்கு மேல் ஏற்படும் தொப்பையை தவிர்க்கலாம். அதற்கான ஆதாரம் இங்கே இருக்கிறது|HOPPAIYAIK KURAIKKA VALIKAL THOPPAI KURAIYA IN TAMIL

எத்தனை முறை சொன்னாலும் நடுத்தர வயதில் எடை கூடுவது தவிர்க்க இயலாதது – 40 வய்தில் உடல் எடை கூடுவதோடு, தொப்பையும் ஏற்படுகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அடுத்த முறை யாராவது இது தவிர்க்க முடியாத வளர்ச்சிதை மாற்ற குறைவினால் நடக்கிறாது என்றால் அப்படி இல்லை என்று உங்களால் அடித்து சொல்ல முடியும்: உங்களால் கப்பலை கூட சுற்ற முடியும். அது ஒன்று கடினமாக வேலை இல்லை.

வளர்சிதை மாற்றம் என்பது ஒரு தவிர்க்க முடியாத விஷயம். இது 8% படி ஒவ்வொரு பத்தாண்டும் மாறும், மேலும் வயது 30 க்கு பிறகு 10% படி வரை 5-0 மாற்ற‌ம் ஏற்படும். “உங்கள் 30 களிலும் 40 களிலும் ஒவ்வொரு ஆண்டும் தசை சுருக்கம் ஏற்படுவதோடு, அரை பவுண்டு எடையும் குறைகிறது, மற்றும் மேலும் நீங்கள் 50 வயதை அடையும் போது, ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஒரு பவுண்டு எடை குறையும்,” என்று பாஸ்டனில் உள்ள‌ குவின்சி கல்லூரி பேராசிரியர் வெய்ன் வெஸ்ட்காட், இது ஒரு உடற்பயிற்சி உடற்கூறு என்கிறார். ஆராய்ச்சியாளர்களால் இது இப்படிதான் நடக்கும் என்று உறுதியாக கூற முடிவதில்லை என்றாலும், இதில் வரும் முக்கிய கோட்பாடு என்னவென்றால் அதை மீண்டும் உருவாக்க முடிவதை விட‌ உங்கள் உடல் ஒரு வேகமான விகிதத்தில் தளர‌ தொடங்குகிறது என்று கூறுகிறார்கள். வளர்ச்சிதை மாற்றத்தால் தசையில் மாற்றம் எதும் ஏற்படுவதில்லை. இதனால் வளர்சிதை மாற்றம் குறைவடைகிறது.

எனவே, நீங்கள் இந்த மாற்றத்தை தலைகீழாக மாற்றமுடியும் என்று நினைக்கிறீர்களா? முடியும், அதிக தசை வலுவையும் பெற முடியும்!


ஆராய்ச்சியின் மூலம், 25 நிமிடங்கள் வாரம் இருமுறை எடையை தூக்கும் பயிற்ச்சியை மேற்கொண்டு பாருங்களேன், உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தை கண்டு நீங்களே வியப்படைவதோடு, கூடுதல் தசை நார்ச்சத்தும் கிடைக்கும் என்று ஆராய்ச்சியின் முடிவில் காட்டுகிறது. வெஸ்ட்காட்டில் இதை செயல் வடிவமாக்கியுள்ளனர், ச்மார் 1600 க்கும் மேற்பட்ட மக்களில், 21 மற்றும் 80 வயதுக்குட்பட்டவர்கள் இந்த பயிற்ச்சியை வாரம் இருமுறை என‌ 10 வாரங்கள் செய்து சுமார் 3.1 பவுண்டுகள் தசை நார்ச்சக்தியை அதிகப்படுத்தி காட்டியுள்ளனர். “இப்படி செய்வதால் உங்களை 6 வயது குறைத்துக் காட்டுகிறது” என்று வெஸ்ட்காட் விளக்குகிறது. பாடங்களில் 12 வெவ்வேறு உடற்பயிற்சிகள் பற்றி விளக்கப்படுகிறது, இதில் 8 முதல் 12 முறைகளை பின்பற்றினால் போதுமான எடையினை பெற முடியும் என‌ ஒரு ஆய்வு செய்துள்ளன‌ர். இதன் சிறப்பு என்னவென்றால், 25 அல்லது 75 வயது என்பது ஒரு பொருட்டு இல்லை, இது அனைத்து வயதினருக்கும் ஒரே முடிவைதான் தருகின்றன என்பதுதான்.
சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

சிக்கன் சூப் செட்டிநாடு|CHETTINAD CHICKEN CHICKEN SOUP IN TAMIL

தேவையான பொருட்கள்
கோழி(எலும்புடன்) – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 10
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 5 பல்
பட்டை, லவங்கம் – தலா 1
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
தனியாத்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை
  • இஞ்சி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கடாயில் எண்ணெய்ஊற்றி பட்டை, லவங்கம் சேர்த்து தாளித்து, இரண்டாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.
  • வதக்கிய கலவையை குக்கரில் போட்டு, மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும் வரை வேக விடவும்.
  • பின்பு சூப்பில் எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும்.
உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்|WEIGHT LOSS FOODS IN TAMIL

உடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்|WEIGHT LOSS FOODS IN TAMIL

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்

தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் டயட் என்று சில சமயங்களில் சாப்பிடாமல் இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்தால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. எனவே எப்போதும் மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டும்.

ஆம், எப்போதும் கடுமையான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொண்டால், உடலுக்கு வேண்டிய சத்துக்களானது கிடைக்காமல், உடல் மிகவும் சோர்வடைவிடும். இதனால் உடல் எடை குறைகிறதோ இல்லையோ, பல உடல்நலப் பிரச்சனைகளை நிச்சயம் சந்திக்க நேரிடும். எனவே அளவான உடற்பயிற்சியுடன், ஆரோக்கியமாக சாப்பிட்டால், உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம். அதிலும் இதுவரை எத்தனையோ உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களைப் பார்த்திருப்போம்.

ஆனால், இப்போது பார்க்கப்போவது பலரும் நினைத்துப் பார்க்காத உடல் எடையைக் குறைக்கும் சில உணவுப் பொருட்களைத் தான். இத்தகைய உணவுப் பொருட்களை சாப்பிடுவதோடு, அத்துடன் தினமும் சரியான அளவில் உடற்பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உடல் எடையைக் குறைப்பதற்கு உணவுகள் மட்டும் உதவாது. ஆகவே உடற்பயிற்சியையும் பின்பற்றுங்கள். சரி, அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால், கீழே படித்துப் பாருங்கள்…

1 காளான்
உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் உணவுப் பொருட்களில் ஒன்று காளான். இந்த காளானை உணவில் அதிகம் சேர்ந்து வந்தால், இதில் உள்ள குறைவான கலோரி மற்றும் கொழுப்புக்களால், உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

2 முட்டையின் வெள்ளைக்கரு
முட்டையின் வெள்ளைக்கருவில் கார்போஹைட்ரேட் குறைவாகவும், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றம் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் உடற்பயிற்சி செய்து முடித்தப் பின்னர், முட்டையின் வெள்ளைக்கருவை சாப்பிட்டால், உடலின் சக்தி அதிகரிப்பதோடு, நீண்ட நேரம் பசிக்காமலும் தடுத்து, உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவும்.

3 ஆப்பிள்
தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரை பார்க்க வேண்டிய அவசியமே இருக்காது. அதே ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடல் எடையையும் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அது உடலில் தங்கும் தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து, உடல் பருமன் அதிகரிப்பதை தடுக்கும்.

4 பாகற்காய்
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, உடல் பருமனால் அவஸ்தைப்படுவோருக்கும் மிகவும் நல்லது. எப்படியெனில், பாகற்காயை சாப்பிட்டால், அதில் உள்ள சத்துக்களானது, உடலில் தங்கும் தேவையற்ற கொழுப்புக்கள் தங்குவதை கரைப்பதோடு, கலோரிகளையும் எரித்துவிடும்.

5 காலிஃப்ளவர்
உடல் எடையை குறைக்கப் பயன்படும் உணவுகளில் காலிஃப்ளவரும் ஒன்று. அதிலும் அந்த காலிஃப்ளவரை வேக வைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. ஏனெனில் அதில் குறைவான கலோரியும், அதிகமான வைட்டமின்களும் நிறைந்துள்ளன. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமலும் இருக்கும்.

6 பட்டை
பட்டையை உணவில் சேர்த்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுடன் இருப்பதோடு, உடல் எடையை குறைக்கவும் உதவும். எனவே இநத் மசாலாப் பொருளை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.

7 மிளகாய்
அனைவருக்குமே காரம் என்றால் மிகவும் பிடிக்கும். கார உணவுகள் கூட ஒரு வகையில் உடல் எடையைக் குறைக்க உதவியாக இருக்கும். அதிலும் குறிப்பாக சிவப்பு மிளகாயை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டால், அந்த மிளகாயில் உள்ள பொருளானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, டாக்ஸின்களை வெளியேற்றி, உடல் எடை குறைய உதவியாக இருக்கும்.

8 முள்ளங்கி
முள்ளங்கியை வேக வைத்து சாப்பிட்டால், அதிலுள்ள நார்ச்சத்துக்களானது அப்படியே கிடைத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களானது கரைக்கப்படுவதோடு, நீண்ட நேரம் பசியெடுக்காமலும் இருக்கும்.


9 டார்க் சாக்லெட்
அனைவரும் சாக்லெட்டில் கலோரிகள் அதிகம் உள்ளது என்று சாப்பிடுவதில்லை. ஆனால் உண்மையில் டார்க் சாக்லெட்டை அளவாக சாப்பிட்டால், உடல் எடை குறைவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

10. பச்சை பயறு
அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கக்கூடிய ஒரு வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள் தான் பச்சை பயறு. உடல் எடையை குறைக்க நினைப்போர், உடற்பயிற்சியை மேற்கொள்வதோடு, பச்சை பயறு அதிகம் சாப்பிட்டு வந்தால், நல்ல பலன் கிடைக்கும். மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் நல்லது.

Wednesday, February 7, 2018

உடல் எடையை குறைக்கும் வெந்தயம்|UDAL EDAI KURAIYA VALIGAL IN TAMIL

உடல் எடையை குறைக்கும் வெந்தயம்|UDAL EDAI KURAIYA VALIGAL IN TAMIL

கோடைகாலம் ஆரம்பித்த நிலையில் உடல் வெப்பமும் அதிகரித்து விட்டது. அப்போது வெந்தயத்தை அதிகம் சாப்பிடுவோம். ஏனென்றால் வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் என்பதால். இதற்கு இன்னொரு குணமும் இருக்கிறது.

வெந்தயம் உடல் எடையையும் குறைக்கும். இதனை சாப்பிடுவதால் ஜிம் செல்லாமல், உடலை வருத்தி உடற்பயிற்சி செய்யாமல் எளிதாக எடையை குறைக்கலாம்.

வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலொரி குறைவாகவும் உள்ளது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இரத்த கொதிப்பு மற்றும் உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் வெந்தயத்தில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளதால், எடை அதிகரிக்க வழி இல்லை மற்றும் உடலில் கலொரி குறைவாக இருந்தாலும் எடை அதிகரிக்காது.


* இரவில் ஒரு ஸ்பூன் வெந்தய விதையை நீரில் ஊற வைத்து, காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு, உடல் எடையையும் குறைக்கும்.

* வெந்தய விதையை சாதாரண தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.

* வெந்தய விதையை பொன்னிறமாக வறுத்து அதை பொடியாக்கி, காற்று புகாத ஒரு டப்பாவில் வைத்து, உண்ணும் உணவில் கலந்து சாப்பிடலாம்.

* வெறும் வயிற்றில் டீ யுடன் வெந்தயப் பொடியைக் கலந்து சாப்பிடலாம். இதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும்.
உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் | UDAL EDAI KURAIKKA

உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் | UDAL EDAI KURAIKKA

உலகில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் தொல்லை தரும் பிரச்சனை என்றால் அது உடல் பருமன் தான். உடல் எடை அதிகம் இருந்தால், எந்த ஒரு வேலையையும் சரியாகவும், நிம்மதியாகவும் செய்ய முடியாது.

எதை செய்தாலும் சிறிது நேரத்திலேயே மூச்சு வாங்கி, உடல் சோர்ந்துவிடும். எனவே பலர் இந்த உடல் எடையை சீக்கிரம் குறைக்க வேண்டுமென்று, தினமும் ஜிம் செல்வது, டயட் மேற்கொள்வது என்று இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, தற்போது உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன.

அவற்றில் ஒன்று தான் ஜூஸ்கள் மூலம் எடையைக் குறைப்பது. அது எப்படி ஜூஸ் குடிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று கேட்பீர்கள். உண்மையிலேயே ஜூஸ்களைக் குடித்தால், ஜூஸ்கள் அடிக்கடி பசி ஏற்படுவதைக் குறைத்து, நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட கண்ட உணவுப் பொருட்களை சாப்பிடமாட்டோம். குறிப்பாக உடல் எடை குறைய வேண்டுமானால், முதலில் அனைவரும் உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் செயலின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.


இதனால் நிச்சயம் விரைவில் உடல் எடையில் நல்ல மாற்றத்தைக் காண முடியும். அதிலும் ஒரு வாரத்தில் உடல் எடையில் ஒரு குறிப்பிட்ட அளவில் மாற்றத்தைக் காணலாம். சரி, இப்போது உடல் எடையை குறைக்க உதவும் ஜூஸ்கள் சிலவற்றைப் பார்ப்போமா!

தர்பூசணி ஜூஸ்

உடல் எடை குறைப்பில் தர்பூசணி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் இதனை தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் குடித்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

அன்னாசி ஜூஸ்


அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியான ஜூஸ் போன்று இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால், பசியானது உடனே அடங்கும்.

அவகேடோ ஜூஸ்

நிறைய பேர் உடல் எடையை குறைக்க நினைக்கும் போது அவகேடோ சாப்பிடக்கூடாது என்று தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால் உண்மையில் இது மிகவும் நல்லது. அதிலும் அவகேடோவை அரைத்து ஜூஸ் போட்டு, தேன் சேர்த்து குடித்து வந்தால், தொப்பை குறைந்துவிடும். மேலும் இதில் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இது உடலில் உள்ள கலோரிகளை எரித்துவிடும்.

தக்காளி ஜூஸ்

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து, அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து, தினமும் மூன்று வேளை குடித்து வர வேண்டும்.

எலுமிச்சை ஜூஸ்

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக் குறைப்பில் முக்கிய பங்கினை வகிக்கிறது. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை ஜூஸில் 1 சிட்டிகை உப்பு மற்றும் தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.

கிரேப் புரூட் ஜூஸ்
கிரேப் புரூட்டில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தால், உடல் எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு பழ ஜூஸை குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழ ஜூஸில் சிறிது தேன் சேர்த்து குடிக்க வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும்.

திராட்சை
தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன்னர், ஒரு டம்ளர் திராட்சை ஜூஸ் குடித்து வந்தால், திராட்சை உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றி, விரைவில் உடல் எடையைக் குறைக்கும்.

கொய்யாப் பழ ஜூஸ்


கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை ஜூஸ் போட்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்.

பெர்ரிப் பழ ஜூஸ்


பெர்ரிப் பழங்களைக் கொண்டு ஜூஸ் போட்டு குடித்து வந்தாலும், உடல் எடை குறையும். அதிலும் உணவு உண்பதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன், இந்த ஜூஸை குடிக்க வேண்டும். இதனால் அதிகளவு உணவு உண்பதைத் தவிர்க்கலாம்
சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

சிக்கன் சால்னா| SALNA RECIPES IN TAMIL

தேவையான பொருட்கள்

சிக்கன் எலும்பில்லாதது / மட்டன் – 1/2 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 1
கறிவேப்பிலை- 10 இலைகள்
மல்லித்தழை – 1/4 கட்டு
பிரியாணி இலை – 1
பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2
சீரகம் – 1/4 தேக்கரண்டி
சோம்பு – 1/4 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
எலுமிச்சம்பழச்சாறு – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய்


அரைக்க

இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
மிளகு – 1 1/2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
வர கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
துருவிய தேங்காய் – 1/4 கப்

செய்முறை

  • அரைக்க கொடுத்துள்ள பொருட்களை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • சிக்கனை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி,1/2 தேக்கரண்டி உப்பு, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு செய்து பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு சேர்த்து வாசம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
  • இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
  • பின் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கிக் கொள்ளவும்.
  • இதனுடன் ஊற வைத்துள்ள சிக்கன், தக்காளி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து எண்ணெய் பிரிந்து தனியே வரும் வரை கொதிக்க விடவும். குழம்பு சிறிது தண்ணியாக இருக்க வேண்டும்.
  • மல்லித்தழை தூவி இட்லி, தோசை, இடியாப்பம், பிரியாணி அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.
உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி | UDAL EDAI KURAIYA UNAVUGAL

உடல் பருமனைக் குறைக்க சில எளிய வழி | UDAL EDAI KURAIYA UNAVUGAL

நெல்லிக்காயை  கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு  கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்  (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்

சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி
வந்தால் உடல் பருமன் குறையும்.

அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து
நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி
குடித்தால் உடல் பருமன் குறையும்.

பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு,  தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை,  கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை,  வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.

கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன்  சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து  சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை  குறையும்.


கொலஸ்ட்ராலை குறைக்கும் ஓட்ஸ், பாதாம்!   உடல் பருமன் ஆவதற்கு ஒரு முக்கிய காரணம்

கொலஸ்ட்ரால். கொலஸ்டிரால் என்பது ஈரலில் உற்பத்தியாகும் ஒரு மெழுகு போன்ற  பொருள். இது சில வகை உணவுகளிலும் காணப்படுகிறது. இது வைட்டமீன் – டீ மற்றும் சில ஹார்மோன்கள், செல்லின் சுவர் மற்றும் பித்த உப்புகள்  உற்பத்திக்கு தேவைப்படுகிறது

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள்  உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். பாதாம் போன்ற பருப்பு வகைகள் சாப்பிட்டால் உடல் எடை  கூடும் என்பதால், பெரும்பாலும் இத்தகைய உணவு வகைகளை பலரும் தவிர்க்கின்றனர். அதற்கு மாறாக இவற்றை சாப்பிட்டால் உடலில் உள்ள  அதிகப்படியான கொலஸ்ட்ரால் கரையும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
கனடா, டொரான்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஜோன் செபேட் தலைமையில்  இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வு முடிவு குறித்து ஜோன் செபேட்  கூறியதாவது: பொதுவாக உடல் எடையை குறைக்க பாதாம், பிஸ்தா ஆகியவற்றை  தவிர்க்குமாறு கூறப்படுகிறது. உடல் ஆரோக்கியத்துக்கு நார்ச்சத்து அவசியம்.

இவற்றையும் தேவைக்கேற்ப உணவில் சேர்ப்பதில்லை. முறையான அறிவுரையின்றி  மேற்கொள்ளப்படும் உடல் பருமன் குறைப்பு நடவடிக்கைகள் பயனற்றதாகவே இருக்கும். மாறாக இதனால் உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தும் உண்டு. சமீபத்திய  எங்கள் ஆய்வில் ஓட்ஸ், நட்ஸ் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு  கட்டுப்படுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.

அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகளும்  உடலுக்கு அவசியம். சோயா உணவு வகைகளான சோயா பால், டோஃபு ஆகியவற்றை அதிகம்
எடுத்துக் கொள்ளலாம். பச்சை பட்டாணி, லென்டில்ஸ் உள்ளிட்ட பயிறு வகைகளை  அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். ஆய்வுக்காக எடுத்துக்
கொள்ளப்பட்டவர்களுக்கு இத்தகைய உணவுகளை தொடர்ந்து 6 மாதங்கள் கொடுத்து கண்காணித்ததில் அவர்களது உடலில் கொலஸ்ட்ரால் அளவு 13 சதவீதம் குறைந்திருந்தது.

ரத்தத்தில் உள்ள எல்டிஎல் கொலஸ்ட்ரால் என்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்பை எளிதாக கரைக்கும். தொடர்ந்து இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்ட 11 சதவீதம் பேர் இதய நோயில் இருந்து மீண்டு தற்போது ஆரோக்கியமாக உள்ளனர். இவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக இதய நோய் பாதிப்பால் அவதிப்பட்டவர்கள். உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் மட்டுமே உடல் பருமனுக்கு தீர்வாகாது. சரியான உணவு முறையை தேர்ந்தெடுப்பது மிகமிக அவசியம். இவ்வாறு ஜோன் செபேட் கூறியுள்ளார்.

Tuesday, February 6, 2018

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

காரைக்குடி மீன் குழம்பு|KARAIKUDI FISH KULAMBU IN TAMIL

தேவையான பொருட்கள்
மீன் – 1 /2 கிலோ
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 15 பல்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி – 1
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 1 /2 – 2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரைக்க
தேங்காய் துருவியது – 1 /4 கப்
மிளகு – 10 – 15
சீரகம் – 2 தேக்கரண்டி
கருவேப்பிலை – 2 கொத்து

தாளிக்க
சீரகம் – 1 /2 தேக்கரண்டி
மிளகு – 1 /2 தேக்கரண்டி
வெந்தயம் – 10
கருவேப்பிலை – ஒரு கொத்து
நல்லெண்ணெய் – 1 /4 கப்



செய்முறை

  • புளியை 1 /2 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
  • தேங்காய், மிளகு, சீரகம், கருவேப்பிலை ஆகியவற்றை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு ஆகியவற்றை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீனை பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
  • கடாயில் என்னை ஊற்றி சீரகம், மிளகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் பூண்டு, வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தக்காளி சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கவும்.
  • பின் புளித்தண்ணீர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
  • நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன், அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து குழம்பு திக்காகும் வரை கொதிக்க விடவும்.
  • வெட்டி வைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.


குறிப்பு
மீன் குழம்பு சாதத்துடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்.
மீன் துண்டுகளை இறுதியாக குழம்பில் சேர்க்க வேண்டும். முன்பே சேர்த்தால் மீன் குழம்பில் கரைந்து விடும்.